சமுர்த்தி
"சமுர்த்தி" ஒரு தேசிய வறுமை ஒழிப்பு திட்டமாக 1994 ம் ஆண்டு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் பிரதான இலக்கு வறுமைக்கான ஒரு தீர்வை பெற்றுக்கொள்வதாகும், இது ஒரு இலகுவான காரியமாக இல்லாத போதிலும் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சுகாதாரம் மற்றும் போசணை மட்டங்களை உயர்த்துதல், மற்றும் கிராம மக்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு சமுர்த்தி திட்டம் முன்னுரிமை வழங்கி வருகின்றது.
இத்திட்டத்திற்காக சமுர்த்தி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு 1994 ம் உருவாக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு இவ்வமைச்சு "சமுர்த்தி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சு" என பெயர் மாற்றப்பட்டது. பின்னர் இத்திட்டம் சமுர்த்தி பிரிவாக தேசிய கட்டிடம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இலங்கை சமுர்த்தி அதிகார சபை 25,000 த்திற்கும் அதிகமான உத்திகேத்தர்களை கொண்டுள்ளதுடன், அவர்களுள் 23,000 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் 2,000 சமுர்த்தி முகாமையாளர்களும் கடமையாற்றுகின்றனர். சமுர்த்தி அதிகார சபையின் கொழும்பு பிரதான காரியாலயத்தின் கீழ் அன்னளவாக 500 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர், ஏனைய அனைத்து உத்திகேத்தர்களும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கடமையாற்றுகின்றனர்.
சமுர்தி அதிகாரசபையின் சில பிரிவுகள், இத்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் தன்மையை விளக்குகின்றன. உதாரணமாக - கிராம வளர்ச்சி பிரிவு, கால்நடை மற்றும் மீன்வள பராமரிப்பு, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, வங்கி நிதி வசதிகள், சமூக அபிவிருத்தி, ஊடக பிரிவு, சட்டம் மற்றும் விசாரணை போன்றவற்றை குறிப்பிடலாம்.
இத்திட்டத்தின் நிறுவாக கட்டமைப்பு கிராம உத்தியோகத்தர் மட்டம், வலய மட்டம், பிரதேச மட்டம் மற்றும் தேசிய மட்டம் போன்ற அனைத்து மட்டங்களிலும் இயங்குகின்றது. சமுர்தி திட்டங்களை செயல்படுத்துவதற்காக பல்வேறு மட்டங்களில் நிர்வாக நிறுவனங்களின் பரந்த ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டுபவர்களின் வௌிக்கொணரப்படாத ஒருங்கிணைப்பு மற்றும் ஆளுமை ரீதியான திறன்களை ஊக்குவிப்பதன் மூலம் அவற்றை உற்பத்தி ரீதியாக மொத்த தேசிய அபிவிருத்திக்கு விளைதிறனாகவும் வினைதிறனாகவும் பங்களிப்பு செய்து ஏழைகளின் வறுமையை குறைப்பதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழும் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் வழிவகுப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் சேவைகள்
- சமுத்த்தி அட்டைகளை வழங்குதல்
- சமுர்த்தி முத்திரைகளின் நிர்வாகம்
- சமுர்த்தி காப்புறுதி திட்டத்தின் நிர்வாகம்
- சமுர்த்தி அதிஷ்ட திட்டத்தின் நிர்வாகம்
- சமுர்த்தி திட்டத்தின் வெவ்வேறு திட்டங்களின் நிர்வாகம்
சமுர்த்தி திட்டங்கள்
- கிராம அபிவிருத்தி திட்டம்
- வாழ்வாதார அபிவிருத்தி திட்டம்
- ஆன்மீக மற்றும் சமூக அபிவிருத்தி திட்டம்
- சமுர்த்தி வங்கி சமூகங்கள் திட்டம்
- சமுர்த்தி வங்கி சங்கங்களினூடாக சிறு கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன
நாடலாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி சங்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு கிராமப்புரங்களில் உள்ள மக்களுக்கு கடன்களை வழங்குவதன் மூலம் அவர்களின் சேமிப்பையும் அதிகரிக்க உதவுகின்றது
சமுர்த்தி அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையப்பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்















