எமது நோக்கம்

எமது நோக்கம் நம்பிக்கையுடன் முன்னிலைக்கு

எமது குறிக்கோள்

அரச கொள்கையை பின்பற்றி, சரியான வழியை காட்டி, தேவையான வசதிகளை வழங்கி, எந்நேரமும் தெளிவாய் இருந்து, பிரதேச மக்கள் மற்றும் சமூகத்தின், தரத்தினை மேம்படுத்துதல் ஆகும்.

மேற்பார்வை

142 சதுர கிலோமீற்றருக்குள் அமைந்துள்ள லுணுகலை   பிரதேச செயலக பிரிவானது பதுளை மாவட்டத்திற்குள் அமைந்துள்ள மிகவும் பின் தங்கிய ஒரு பிரதேச செயலக பிரிவாகும்.அதிகமான மலைத்தொகுதிகளைக் கொண்ட இப்பிரதேசத்தில் கூடுதலான பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. இத்தோட்டபிரதேசத்திற்கருகாமையில் பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புக்கள் அமைந்துள்ளன.,1818 இல் ஏற்பட்ட புறட்சியின் நிமித்தம் பாதுகாப்பிற்காக தேர்ந்அதடுக்கப்பட்ட இடங்கள் கிராமங்களாக உருவாகின.,அவ்விடங்களில் கிராம குடியிருப்புக்கள் உருவாகி சிங்கள மக்கள் குடியேறினர்.

இவ்வாறு கிராம புறம்,தோட்ட புறம் என இரு பிரிவுகளாக உருவாகி நிர்வாக வசதிகளுக்கமைய 28   கிராம அலுவலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

28 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட  லுணுகலை   பிரதேச செயலக  காரியாலயம்   2001.04.20   ஆம்     திகதி     முதன் முதலில்      தோற்றுவிக்கப்பட்டது.     அதற்கு முன்பு  பசறை பிரதேச செயலக  காரியாலயத்திற்கு உட்பட்டு இருந்தது.நிர்வாகத்தின்      வசதியை       கருதி ச.கி 141      க்    கொண்ட லுணுகலை பிரதேச செயலக  காரியாலயம்    2001 சித்திரை மாதம்    20ஆம்      திகதி       பிபிலை வீதியிலே      ஸ்தாபிக்கப்பட்டிருந்த பிரதேச சபைக்கு உரித்தான மூடிய நிலையில் காணப்பட்ட கம்சபா கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இங்கே     ஆரம்ப     நிர்வாக     உறுப்பினர்களாக      பிரதான எழுதுவினைஞர்      உட்பட எழுதுவினைஞர்கள்     இருவர்  இருந்தனர். ஆரம்பக்     காலகட்டத்தில்    இருந்து     இன்று     வரை    பிரதேச செயலாளர்கள்  மூவர் சேவையாற்றியுள்ளனர் .முதலில் லுணுகலை பிரதேச செயல காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட போது    பிரதேச செயலாளர் ஒருவர்    இல்லாமையால், அச்சந்தர்பத்தில் பசறை  பிரதேச செயலக காரியாலயத்தில் பிரதேச செயலாளராக கடமை புரிந்து வந்த ஏ.ஜீ.சமரதுங்க அவர்கள் கடமையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்கட்டிருந்தார்.அவர் 2001.08.27 ஆம் திகதி வரை   இப்பிரிவினுள்    பிரதேச செயலாளராக சேவை புரிந்து வந்தார்.2001.08.27   ம்     திகதி     முதல்     லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவினுள் பிரதேச செயலாளராக  டப்ளிவ்.ஜீ.நாபாவல அவர்கள் நியமிக்கப்ப்டிருந்தார்.அவர் 2001.08.27ம் திகதியில் இருந்து 2003.11.27 ம் திகதி வரை இப்பிரிவிற்குள் பிரதேச செயலாளராக  சேவை    புரிந்து வந்தார்.   

அதன்    பிறகு 2003.11.27 ம் திகதி முதல் 2006.02.25ம் திகதி வரை ஜே.எம்.எஸ்.ஜயசுந்தர  அவர்கள் லுணுகலை பிரதேச செயலாளராக  சேவை  செய்தார்.2006.02.25 ஆம் திகதி முதல் இன்று வரை இப்பிரிவினுள் பிரதேச செயலாளராக பீ.எஸ்.பீ.   அபேவர்தன    அவர்கள் லுணுகலை      பிரதேச செயலாளராக சேவையாற்றுகிறார். சுமுதுகம     கிராம     அலுவலர்     பிரிவிற்குள்    நிர்மாணிக்கப்பட்ட புதிய    பிரதேச செயலக காரியாலயக்     கட்டிடம் 2006.12.17ஆம்    திகதி    அரச   நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள்    கெளரவ அமைச்சர் சரத் அமுணுகம அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.பிறகு    பிபிலை    வீதியில்    அமைந்திருந்த    பிரதேச சபைக்குரித்தான     மூடப்பட்ட    நிலையில்    காணப்பட்ட    கம்சபா கட்டிடத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்த லுணுகலை பிரதேச செயலக காரியாலயத்தை 2006.12.17 ஆம் திகதி முதல் சுமுதுகம கிராம     அலுவலர்     பிரிவிற்குள்  கட்டப்பட்ட     புதிய  பிரதேச செயலக காரியாலயக் கட்டிடத்தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தற்போது   ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுமுதுகம   கிராம அலுவலர் பிரிவிற்குற்பட்ட   புதிய பிரதேச செயலக காரியாலயக் கட்டிடத்தொகுதி     அமைந்துள்ள     பூமியானது     லுணுகலை    பத்தினி தேவாலயத்திற்குட்பட்டதாகும்.அன்று     தொடக்கம்     பலதரப்பட்ட மாற்றங்தளுக்குள்ளாகி   இன்று     இருக்கும்     நிலை    வரை இக்காரியாலயம்   நாளுக்கு நாள் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கிறது.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

21
ஆக2025
Useful AI Tools

Useful AI Tools

Access the largest list of top-quality AI...

21
ஆக2025
Web Training Programme 2025

Web Training Programme 2025

      click me   

குடியுரிமை சாசனம்

Scroll To Top